ஐபிஎல் போட்டி ஊதியத்தில் 10 சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜெயதேவ் உனட்கட் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் மருவத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க இந்தியாவுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் முதன் முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 37 லட்சம் கொடுத்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி 7.5 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 50 லட்சமும் இந்தியாவுக்கு நிதியுதவி செய்திருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்தவரும் பஞ்சாப் அணி வீரரான நிக்கோலஸ் பூரணும் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I am contributing 10% of my IPL salary towards providing essential medical resources for those in need. My family will make sure it reaches the right places. Jai Hind! <a href="https://t.co/XvAOayUEcd">pic.twitter.com/XvAOayUEcd</a></p>— Jaydev Unadkat (@JUnadkat) <a href="https://twitter.com/JUnadkat/status/1388077327213543428?ref_src=twsrc%5Etfw">April 30, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜெய்தேவ் உனட்கட் தற்போது இந்தியாவுக்கு உதவி செய்யும் வகையில் தனது ஐபிஎல் சம்பளத்தில் இருந்து 10% கொடுத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 3 கோடிக்கு ராஜஸ்தான் அணி இவரை வாங்கியது. இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்.