டிரெண்டிங்

"உதயநிதி ஜி... உங்கள் கூற்றுகள் பொய்யானவை!" - சுஷ்மா மகள், அருண் ஜேட்லி மகள் கொந்தளிப்பு

"உதயநிதி ஜி... உங்கள் கூற்றுகள் பொய்யானவை!" - சுஷ்மா மகள், அருண் ஜேட்லி மகள் கொந்தளிப்பு

webteam

மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் மோடியின் அழுத்தத்தால் உயிரிழந்ததாக உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு சுஷ்மா மகளும், அருண் ஜேட்லியின் மகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, "சுஷ்மா ஸ்வராஜ் என்று ஒரு அமைச்சர் இருந்தார். பிரதமர் மோடி கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார். அதேபோல மோடியின் டார்ச்சரால்தான் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியும் உயிரிழந்தார்" என பேசியிருந்தார்.

அத்துடன், பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கைய நாயுடு கட்சியிலிருந்து ஓரம் கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நீங்கள் அனைவரையும் ஓரங்கட்டினீர்கள் மோடி அவர்களே... உங்களைக் கண்டு பயப்படவோ அல்லது உங்கள் முன் தலைவணங்கவோ நான் (தமிழக முதல்வர்) பழனிசாமி அல்ல. நான் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின்" என்றும் உதயநிதி பேசியிருந்தார்.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், தேர்தல் பிரசாரத்திற்காக உதநிதி தனது தாய் சுஷ்மா ஸ்வராஜை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

@udhaystalin ji please do not use my Mother's memory for your poll propaganda! Your statements are false! PM @Narendramodi ji bestowed utmost respect and honour on my Mother. In our darkest hour PM and Party stood by us rock solid! Your statement has hurt us @mkstalin @BJP4India
— Bansuri Swaraj (@BansuriSwaraj) April 1, 2021

மேலும், "உதயநிதி ஜி தயவுசெய்து உங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என் தாயின் நினைவுகளை பயன்படுத்த வேண்டாம்! உங்கள் கூற்றுகள் பொய்யானவை! பிரதமர் நரேந்திர மோடி ஜி என் அம்மாவுக்கு மிகுந்த மரியாதையையும் கௌரவத்தையும் வழங்கினார். எங்கள் இருண்ட நேரத்தில் பிரதமரும், கட்சியும் (பிஜேபி) எங்களுடன் நின்றன! உங்கள் இந்தப் பேச்சு எங்களுக்கு வேதனை அளித்துள்ளது" என்று பன்சூரி ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவை மு.க.ஸ்டாலின் மற்றும் பிஜேபியின் அதிகாரபூர்வ பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.

இது தொடர்பாக 'இந்தியா டுடே'-க்கு பேட்டியளித்த பன்சூரி ஸ்வராஜ், "உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் "வெறுக்கத்தக்கவை, அவமரியாதைக்குரியவை" என்று விமர்சித்தார்.

"இது முற்றிலும் வெறுக்கத்தக்கது, தவறானது. உதயநிதி நமது பிரதமர் மோடியை தாக்க என் அம்மா மற்றும் அருண் ஜேட்லியின் மறைவை பயன்படுத்தியுள்ளார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஒரு குடும்பமாக, நாங்கள் மிகவும் வேதனை அடைகிறோம். இது என் அம்மாவின் நினைவை இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், திமுகவின் தேர்தல் பிரசாரம் எவ்வளவு இழிவானது என்பதையும் காட்டுகிறது" என்று பன்சூரி ஸ்வராஜ் கூறினார்.

.@Udhaystalin ji, I know there is election pressure - but I won't stay silent when you lie & disrespect my father's memory.

Dad @arunjaitley & Shri @narendramodi ji shared a special bond that was beyond politics. I pray you are lucky enough to know such friendship...@BJP4India
— Sonali Jaitley Bakhshi (@sonalijaitley) April 1, 2021

இதேபோல், அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்‌ஷியும் தனது தந்தை குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும் - ஆனால் அதற்காக நீங்கள் என் தந்தையின் மறைவு குறித்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதை பார்த்துக்கொண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன். அப்பா அருண் ஜேட்லியும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த நட்பை கொண்டிருந்தனர். நீங்கள் அவர்களுடைய நட்பு குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில், சுஷ்மா ஸ்வராஜுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்காரணமாக 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. உடல்நிலை மோசமடைந்ததால் அவர் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தனது 67 வயதில் காலமானார். அருண் ஜெட்லியும் உடல்நலக் குறைவு காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சையின் பின்னர், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி, அன்று தனது 66 வது வயதில் காலமானார்.