டிரெண்டிங்

சிவசேனா எம்.பிகளுடன் அயோத்தி செல்லும் உத்தவ் தாக்கரே

rajakannan

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிவசேன தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி செல்லவுள்ளார்.

மக்களவை தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் போட்டியிட்டின. இதில், பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல், பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று தனிப்பெரும் மெஜாரிட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேன எம்.பிக்கள் 18 பேர் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உடன் ஜூன் 15ஆம் தேதி அயோத்தி செல்கின்றனர். ஜூன் 17ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்கள் அயோத்தியாவில் ஜூன் 15 முதல் 17ஆம் தேதி இருக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் 17ஆம் தேதி அன்றே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்கள் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவோம் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.