டிரெண்டிங்

'சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்' - உதயநிதி ஸ்டாலின்

'சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்' - உதயநிதி ஸ்டாலின்

JustinDurai

வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு தமிழக மக்கள் உரிய அங்கீகாரம் தருவர் என நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET  கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை,  உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். வாக்களித்த பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ''சட்டமன்ற தேர்தலை காட்டிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றி திமுகவுக்கு கிடைக்கும். 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். நல்ல வரவேற்பு இருந்தது.

வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு தமிழக மக்கள் உரிய அங்கீகாரம் தருவர் என நம்புகிறோம். மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக திமுகவிற்கு வெற்றி  வாய்ப்பு இருக்கும். திமுக பண விநியோகம் செய்வதாக வேலுமணி ஆதாரம் இல்லாமல் புகாரளித்துள்ளார். எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது  குறித்து முதல்வர்தான்  முடிவு செய்ய வேண்டும் , அமைச்சர் பதவி கொடுத்தால் அப்போது அது பற்றி பேசிக் கொள்ளலாம். முடிவெடுக்க வேண்டியது தலைமைதான்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: "21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்"- வாக்களித்த பின் முதல்வர் பேட்டி