டிரெண்டிங்

எதிரிக்கு பிரஷர் கொடுக்கும் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன்

எதிரிக்கு பிரஷர் கொடுக்கும் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன்

webteam

எதிர்களுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் கொடுக்கவே தனக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் கோரியிருந்த தொப்பி சின்னம் ரமேஷ் என்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினகரன் கோரிய மற்ற சின்னங்களும் வழங்கப்படாத நிலையில், இறுதியாக பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆர்.கே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எந்தச் சின்னத்தை கொடுத்தாலும் நான் போட்டியிடத்தான் செய்வேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதன்படி எதிரிகள், துரோகிகளின் ப்ளெட் பிரஷரை ஏற்றும் விதமாக, தாய்மார்கள் பெரிதும் விரும்புகிற பிரஷர் குக்கர் சின்னத்தை எனக்கு ஒதுக்கியுள்ளார்கள்” என்று கூறினார்.