டிரெண்டிங்

டிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்

டிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருப்போரூரில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டையும் அத்தொகுதி மக்கள் நலனையும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுங்கட்சியின் இத்தகைய போக்கை கண்டித்து வரும் நவம்பர் 13 ஆம் தேதி திருப்போரில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், திருப்போரில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் காரணமாக உண்ணாவிரத தேதி மாற்றப்பட்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என அமமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் இப்போராட்டத்தில் மாலை 4 மணியளவில் டிடிவி தினகரன் கலந்து கொள்ள உள்ளதாகவும் கழக நிர்வாகிகள், செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கலந்து கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.