டிரெண்டிங்

“நிர்வாகிகள் விலகிச் செல்வதால் இயக்கம் வலுப்படும்” - டிடிவி தினகரன்

“நிர்வாகிகள் விலகிச் செல்வதால் இயக்கம் வலுப்படும்” - டிடிவி தினகரன்

webteam

இசக்கி சுப்பையா விலகல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக களம் இறங்கியவர் இசச்கி சுப்பையா. இவர் தற்போது அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் தனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள இசக்சி சுப்பையா, சுயலாபம் பார்ப்பதாக இருந்தால் அமமுகவில் சேர்ந்தே இருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஜூலை 6-ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் 20,000 பேருடன் அதிமுகவில் இணைவதாக தெரிவித்துள்ள இசக்கி சுப்பையா, தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “48 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல; நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னால்தான் இசக்கி சுப்பையா அடையாளம் காட்டப்பட்டார் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். ஆனால் தினகரனே தொண்டர்களால் அடையாளம் காணப்பட்டவர்தான்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இசக்கி சுப்பையா விலகல் குறித்து அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், நிர்வாகிகள் விலகி செல்வதை தடுக்க இயலாது எனத் தெரிவித்தார். மேலும், “நிர்வாகிகள் தங்களின் சொந்த காரணத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் வெளியே போகிறார்கள். அதை தடுத்து நிறுத்தி என்ன ஆக போகிறது? எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள் எங்களை விலகிப் போவதால் எங்கள் இயக்கம் மேலும் வலுப்படும். அதனால் பதிப்பு இல்லை” என்று கூறினார்.