டிரெண்டிங்

ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை: 34 எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு என்ன?

ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை: 34 எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு என்ன?

webteam

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி ‌தினகரன், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் நிலைப்பாட்டை, சசிகலா எடுப்பார் என்று தினகரன் கூறிவந்தார். ஆனால், முதல்வரும், அமைச்சர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து என்ன முடிவெடுப்பது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இன்று டிடிவி தினகரனை சந்தித்த, அதிமுக எம்.எல்.ஏ. கருணாஸ், சசிகலா சொல்கிறவர்களுக்குதான் வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். மற்றொரு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.வான தமிமுன் அன்சாரி, பாஜக வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், கொறடா உத்தரவு மீறி வாக்களித்து பதவி இழந்தாலும் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.