டிரெண்டிங்

அணிகள் இணைப்பில் சிக்கல்? - ஓபிஎஸ் தரப்பு புதுநிபந்தனை

webteam

சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைப்பு இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகம் வருவதாகவும் கூறப்பட்டது. இணைப்புக்குப் பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து அறிவிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் தயக்கம் காட்டுவதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. எனவே சசிகலா நீக்கம் குறித்து திட்டவட்டமாக எடப்பாடி அணியினர் அறிவித்த பிறகே தலைமைக் கழகம் வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இரு அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே டிடிவி தினகரன் தலைமையில் 16 எம்எல்ஏக்கள் அவரது அடையாறு இல்லத்தில் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.