திரிபுரா மக்கள் மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
திரிபுராவில் பிப்ரவரி 18ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இந்நிலையில் சோனாமுராவில் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலத்திற்காக '3T' திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறினார். வர்த்தகம், சுற்றுலா, இளைஞர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை அடக்கிய புதிய திட்டத்தின் மூலம் திரிபுரா மிளிர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சியில் மக்களுக்கு எந்தவித சுதந்தரமும் இல்லை என்றும், தொழிலாளர்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதில்லை என்றும் மோடி சாடினார். மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.