டிரெண்டிங்

வெள்ளம்புத்தூர் கொடூரம் - ”சிபிஐக்கு மாற்ற வேண்டும்”

வெள்ளம்புத்தூர் கொடூரம் - ”சிபிஐக்கு மாற்ற வேண்டும்”

webteam

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூர் அருகே உள்ள வெள்ளம் புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 22ம் தேதி ஏற்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவத்தில் இன்று வரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து, கடந்த 3ம் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் வெள்ளம்புத்தூர் கிராம மக்கள் .இது வரை 267 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது

இந்த வழக்கில் 2 டி எஸ்பி தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தருகிறவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார் இந்த வழக்கில் இன்னமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத நிலையில் அதில் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அதுவரை எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும் கூறினார்கள். மேலும் அந்த குடும்பத்தினருக்கு அளிக்கப் பட்ட நிவாரண தொகை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்கள். 13 நாட்கள் கடந்தும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.