இன்றைய காலை தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறை
டிரெண்டிங்

காலை தலைப்புச் செய்திகள் : போட்டிக்கு தயாராகும் அலங்காநல்லூர் முதல் பாக். மீது ஏவுகணை தாக்குதல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது போட்டிக்கு தயாராகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் முதல் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் வரை இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்: 

  • அலங்காநல்லூரில் தயார் நிலையில் ஜல்லிக்கட்டுக் களம். 1,200 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு அனுமதி

  • காணும் பொங்கலையொட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். சென்னை முழுவதும் பாதுகாப்புப் பணியைக் கவனிக்க 15 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள்.

  • காணும் பொங்கல் நாளில் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கம் - சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.

  • பாரம்பரியச் சிறப்புடன் நடைபெற்று முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு... 14 காளைகளை தீரத்துடன் அடக்கி காரை வென்றார் வீரர் பிரபாகரன்.

  • திமில் பிடிக்கப் பாய்ந்த காளையரை திணறச் செய்த காளைகள்... பரபரத்த பாலமேடு ஜல்லிக்கட்டுக் களம்.

  • விடுமுறையால் சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்துள்ளனர் மக்கள். இதனால் சென்னை மெரினா கடற்கரை, கல்லணை மற்றும் குற்றால அருவிகளில் கூட்டம் குவிந்தது.

  • காவி உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோன்ற படத்துடன் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.

  • சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச புத்தகக் காட்சி தொடங்கப்பட்டது. வெளிநாட்டு மொழிகளில் தமிழ் நூல்களை மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.

  • 2 நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.

  • அயோத்யா ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியுள்ளது. வரும் 22 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு.

  • “ராமர் கோயில் விழா பிரதமர் மோடியின் அரசியல் விழாவாக மாறிவிட்டது” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

  • “ராமர் கோவில் திறப்பு நாளில் ராம நாமம் உச்சரிக்க வேண்டும்” என்ற பாடகி சித்ராவின் கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • மதுரை மாவட்டம் எலியார்பத்தியில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு.

  • திருத்தணியில் அனுமதியின்றி நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், குதிரை வண்டிகள் ஏறி சாலையில் நின்ற இருவர் காயம்.

  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளனர்.

  • ஆந்திர காங்கிரஸ் தலைவரானார் ஒய். எஸ். ஷர்மிளா.

ஆந்திர காங்கிரஸ் தலைவரானார் ஒய். எஸ். ஷர்மிளா.
  • தென் கொரியாவுடன் இணைப்பு என்பது இனி சாத்தியமில்லை. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு.

  • பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். அத்துமீறும் நடவடிக்கை என பாகிஸ்தான் கண்டனம்.

  • அத்தியாவசிய உதவிப் பொருள்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  • பெங்களூருவில் ஆப்கானுஸ்தானிக்கு எதிரான 3ஆவது டி 20 போட்டி இன்று நடக்கிறது. தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்க உள்ளது.