தற்போது உள்ள சூழலில் 19 பேர் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வந்திருக்கக் கூடிய செய்தி என்னவென்றால் 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்குகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், 89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய ‘பந்து’ வந்தால் கவர்னர் என்ன நடவடிக்கை எடுப்பார். அந்த பந்தை நாங்கள் கொண்டு போறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி. இப்போதே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும்” என்றார்.
மேலும் பேசிய ஸ்டாலின், “அதனால்தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முடிவு எடுக்கும். ஆனால் அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திமுகவின் சுய நலத்திற்காக அல்ல. தமிழ்நாட்டு மக்களுடைய நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார்.