டிரெண்டிங்

மாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

மாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

rajakannan

மாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

3-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சென்னையில் இன்று தொடங்கி 16-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய
அமைச்சர் கே.பி.அன்பழகன், மாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், மேலை நாடுகளை ஒப்பிடும்போது அறிவியலில் நம் மாணவர்களின் ஈடுபாடு குறைவுதான்.
அறிவியல்  கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உபகரணங்களை பெற்றோர்கள் செய்து தரக்கூடாது என்று
கூறினார்.

மதுரையில் டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமை நேற்று தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, வீட்டு
வாசலில் சாணம் தெளிக்கும் பழைய முறையை கடைபிடித்தால் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் என்று கூறினார்.
மேலும், பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சானம் தெளிக்கும் முறையை அதற்கான வசதியுள்ள மக்கள் இன்றும் பின்பற்ற
வேண்டும் என்று வலியுறுத்தினார்.