டிரெண்டிங்

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியா? - அமைச்சர் ஜெயக்குமார்

rajakannan

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். மெரினாவில் போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்வோம்” என்று கூறினார்.

மேலும், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவை தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசை செயல்படுத்த கூறியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.