டிரெண்டிங்

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பரிந்துரை

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பரிந்துரை

rajakannan

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான 5 வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, வழக்குகளை இரண்டு நீதிபதிகளுக்கு மேலடங்கிய அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். ஆளுநர், சபாநாயகர் ஆகியோர் வழக்கில் வருவதாலும், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதாலும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளதாக நீதிபது தெரிவித்தார்.

5 வழக்குகளின் விவரம்:-

  • தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.
  • ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா, தினகரன் தரப்பு வழக்கு.
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு .
  • குட்கா விவகாரத்தில் அவை உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு.
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் ஓபிஎஸ், பாண்டியராஜனை பதவி நீக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு.