டிரெண்டிங்

அரசின் குறைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்: ஜாமீன் பெற்ற கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி

அரசின் குறைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்: ஜாமீன் பெற்ற கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி

rajakannan

கந்துவட்டி கொடுமை குறித்து கார்ட்டூன் வரைந்ததற்காக கைதான காட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து பாலா கார்ட்டூன் ஒன்றினை தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த கார்ட்டூனுக்கு எதிராக நெல்லை மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட பாலா நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, பாலாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “நான் கொலை எதுவும் செய்யவில்லை, அதனால் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை. அரசின் குறைகளை எனது கார்ட்டூன் வழியாக தொடர்ந்து வெளிப்படுத்துவேன். வரைவதை நிறுத்த மாட்டேன்” என்று கூறினார்.