டிரெண்டிங்

போலீஸ் தாக்கி இறந்ததாக தவறான தகவலை பகிர வேண்டாம் : நெல்லை துணை ஆணையர்

போலீஸ் தாக்கி இறந்ததாக தவறான தகவலை பகிர வேண்டாம் : நெல்லை துணை ஆணையர்

webteam

நெல்லையில் விபத்தால் இறந்த ஒருவரை போலீஸ் தாக்கி இறந்ததாக தவறான தகவல் பகிர வேஎண்டாம் மாவட்ட துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் என்பவர் மருத்துவமனையில் போலீசாரால் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். ஆனால் சண்முகம் விபத்தில் சிக்கியிருந்ததாகவும், அவரை மீட்டு தாங்கள் தான் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்பாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள டிசிபி அர்ஜுன் சரவணன், “இது மிகவும் தவறான தகவல். காவல்நிலைய விசாரணை ஏதுமில்லை. சாலை விபத்தின் காரணமாகவே இறந்துள்ளார். மேலதிக தகவல்களை தொடர்ந்து தருகிறேன். அவசரப் பட வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.