டிரெண்டிங்

அணியின் தரம்.. வயதான வீரர்கள்.. சிஎஸ்கே குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் பிளமிங்

அணியின் தரம்.. வயதான வீரர்கள்.. சிஎஸ்கே குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் பிளமிங்

jagadeesh

சிஎஸ்கே வீரர்களின் திறன் குறைந்துவிட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் குறைந்தது. இது குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார்.

அதில் "புள்ளிகள் பட்டியலை பார்க்கும்போது சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக தெரியும். ஆனால் இந்த அணியை வைத்துக்கொண்டு 2018 இல் கோப்பையை வென்றோம், கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றோம். வயதான வீரர்களை கொண்டு இந்தாண்டு தொடர் கடினமாக இருக்கும் என்றே நினைத்தோம். மேலும் அமீரகத்தின் ஆடுகளம் தட்ப வெப்பம் ஆகியவையும் சிரமத்தை கொடுத்தது" என்றார்.

மேலும் தொடர்ந்த பிளமிங் "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போது அணியில் இருக்கும் வீரர்களின் மன நிலை சோர்வடைந்துள்ளது. கடந்த சில போட்டிகளில் நாங்கள் போராடினோம். ஆனால் ராஜஸ்தானுடனான போட்டியில் நாங்கள் முற்றிலுமாக போராடாமல் தோற்றோம். தொடரில் நீடிக்க வேண்டுமென்றால் நேற்றையப் போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்றும் தெரியும். ஆனால் இப்போதும் வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம்" என்றார்.