தமிழக சாரண சாரணியர் தேர்தல் முறைகேடாக நடந்ததாக அந்தத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எச்.ராஜா கூறியுள்ளார்.
சாரண, சாரணியர் தேர்தலில் போட்டியிட்ட ஹெச்.ராஜா வெறும் 52 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை தழுவினார். இது குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியாளருக்கு ப்ரத்யேகமாக பேட்டி அளித்திருந்தார் அவர். அதில் அவர், இது முறைகேடான தேர்தல். இந்தத் தேர்தலுக்கு அதிகாரியாக ஸ்டேட் செகரட்ரி நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஜாய்ண்ட் செகரட்ரியை அதிகாரியாக போட்டுள்ளனர். ஆகவே இந்தத் தேர்தல் செல்லாது. இதை ரத்து செய்ய வேண்டும். 23ம் தேதிதான் தேர்தலை நடத்த அனுமதி தந்திருக்கிறார்கள். ஆனால் முன்கூட்டியே 13ம் தேதி தேர்தலை அவசர அவசரமாக நடத்தி முடித்துள்ளனர்.
என்னிடம் சாரண, சாரணியர் இயக்கம் சரியாக செயல்படவில்லை. அதில் சில சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பை சார்ந்தவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்காகவே தேர்தலில் போட்டியிட சம்மதித்தேன். மற்றபடி தேர்தல் சம்பந்தமாக வழக்கு எதுவும் தொடர போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.