டிரெண்டிங்

திருவாரூர்: ’18.3 கிலோ தங்கம் ரூ.17 லட்சம் ரொக்கம்’ - போலீசாரின் வாகன சோதனையில் பறிமுதல்

திருவாரூர்: ’18.3 கிலோ தங்கம் ரூ.17 லட்சம் ரொக்கம்’ - போலீசாரின் வாகன சோதனையில் பறிமுதல்

kaleelrahman

திருத்துறைப்பூண்டி அருகே காவல்துறை சோதனைச்சாவடியில் போதிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 18 கிலோ 300 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கணக்கில் வராத 17 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக பட்டுக்கோட்டை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்து காரில் வந்த சேலத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்களிடம் 18 கிலோ 300 கிராம் தங்க நகைகளை நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த வட்டாட்சியர் நகைகளை பறிமுதல் செய்தார். மேலும் இதேபோல் சோதனைச் சாவடியில் தொடர்ந்த வாகனங்களை சோதனையிட்டனர் அப்போது திருச்சிக்கு சென்ற ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தை மறித்து சோதித்தபோது உரிய ஆவணங்கள் இன்றி 17 லட்ச ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் ஜெகதீசன் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் மற்றும் தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.