டிரெண்டிங்

குழந்தையைக் கடத்திக்கொண்டு இ-பாஸ் இன்றி பயணம் : காவல்துறையிடம் சிக்கிய தம்பதி..!

குழந்தையைக் கடத்திக்கொண்டு இ-பாஸ் இன்றி பயணம் : காவல்துறையிடம் சிக்கிய தம்பதி..!

webteam

கோவையிலிருந்து குழந்தையைக் கடத்திக்கொண்டு இ-பாஸ் இல்லாமல் திருவாரூர் பயணித்த தம்பதியினர் காவல்துறையிடம் சிக்கினர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் - செல்வராணி தம்பதியினருக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காகக் கோவை மருத்துவமனைக்கு இந்தத் தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது அங்குக் குழந்தைகளைக் கொஞ்சுவது போல நடித்த இளம்பெண் ஒருவர், ஒரு குழந்தையைக் கடத்திக்கொண்டு மாயமானார் எனக் கூறப்படுகிறது.

இந்தச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தம்பதியினர் குழந்தை இல்லாததால் மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதோடு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மண்டலம் வாரியாக தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இருக்கும் சூழலில், கோவையிலிருந்து திருவாரூர் வரை அந்தத் தம்பதியினர் குழந்தையைக் கடத்திச் சென்றது விசாரணையில் வெளிவந்தது.