18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஜூலை 23 முதல் 3ஆவது நீதிபதி தனது விசாரணை தொடங்குகிறது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக விமலா பரிந்துரை செய்யப்பட்டார். அதனை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் இந்த வழக்கை விசாரணை செய்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் ஜூலை 23ஆம் தேதி முதல் தினமும் விசாரிக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூலை 23 முதல் 27ஆம் தேதி வரை தினமும் மதியம் இந்த விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.