டிரெண்டிங்

சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தொடர்பு: சைதை துரைசாமி குற்றச்சாட்டு

சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தொடர்பு: சைதை துரைசாமி குற்றச்சாட்டு

rajakannan

சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் பணத் தொடர்பு உள்ளதாக முன்னாள் மேயர் சைதை துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சசிகலா குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகுறித்து கருத்து தெரிவித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் இலவசமாகக் கல்வி வழங்குகிறேன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவரும் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சட்டை அடுத்து ஸ்டாலின் மீது சைதை துரைசாமி பல்வேறு புகார்களை சரமாரியாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சைதை துரைசாமி, “பொது வாழ்வில் திறந்த புத்தகமாக நான் இருந்து வருகிறேன். மு.க.ஸ்டாலின் பொய்யான அவதூறுகள் திட்டமிட்டு செய்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் அதிகார துஸ்பிரோயகம் செய்ததை வெளிப்படுத்தினேன். அதன் காரணமாக தான் என் மீது தவறாக பேசி வருகிறார்” என்றார். 

மேலும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் சேகர் ரெட்டிக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். அதேபோல், ரெட் ஜெயண்ட்டுக்கும் சேகர் ரெட்டிக்கும் வரவு செலவு இருக்கிறது” என்று கூறினார். வருமான வரித்துறை முறைகேடாக நான் பணம் சேர்த்திருந்தால். அதை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து நான் விலக தயார் என்றும் சைதை துரைசாமி தெரிவித்தார்.