டிரெண்டிங்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

webteam

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும்‌, சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பா‌ளருமான கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்‌ மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கியது. மேலும் வைப்புத்தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.