துறவி வென் அஜன் சிரிபானியோ  நெட்
டிரெண்டிங்

40 ஆயிரம் கோடி வேண்டாம்! வசதிகளை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் வாரிசு! என்ன செய்கிறார்?

ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன். இவர் டெலிகாம், ஊடகம், எரிபொருள் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற பல வணிகத்துறைக்குச் சொந்தகாரர். இவரின் ஒரே வாரிசு அனைத்தையும் துறந்து துறவியான அதிசயம் .

Jayashree A

40000 கோடியை உதறிவிட்டு துறவியான ஏர்செல் உரிமையாளரின் வாரிசு.

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்ற பழமொழி உண்டு. பழமொழிக்கு தகுந்தார்போல் உலகமே பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்க, அதிலிருந்து விலகி சிலர் மாற்றுபாதையில் செல்வதும் உண்டு. அப்படி மாற்றுப்பாதையில் சென்ற ஒருவரை பற்றிதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

துறவி வென் அஜன் சிரிபானியோ

டெலிகாம் உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர் ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன் இவரை ஏ.கே என்று அழைப்பர். இவர் டெலிகாம், ஊடகம், எரிபொருள் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற பல வணிகத்துறைக்குச் சொந்தகாரர். அதுமட்டுமல்லாமல் czar என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 40,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவருக்கு வென் அஜன் சிரிபானியோ என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

சிறுவயது முதல் சிரிபானியோவிற்கு பௌத்த மதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. நாளாக நாளாக துறவியாக மாறும் எண்ணம் கொண்டு தனது 18 வது வயதில், ஒரு சிறு முயற்சியாக தற்கால துறவரத்தை மேற்கொண்டிருக்கிறார். பின்னர் அதன் மீது ஈடுபாடு ஏற்பட்டு நிரந்தர துறவியாக மாறியுள்ளார்.

சிரிபானியோ தனது குடும்பத்தையும், கோடிக்கணக்கான சொத்துகளையும் துறந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். கிட்டதட்ட 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர், தற்பொழுது தாய்லாந்தில் இருக்கும் பௌத்தமடத்தில் தலைமை பொறுப்பை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.