டிரெண்டிங்

''ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன்'' - வி.கே.சசிகலா

''ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன்'' - வி.கே.சசிகலா

JustinDurai

''ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜம் செய்யக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார் வி.கே.சசிகலா.  

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வி.கே.சசிகலா தி.நகர் வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் சசிகலா செய்தியாளர்களுக்கு  பேட்டியளிக்கையில், ''தற்போது ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக  வாக்களிக்கிறேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜம் செய்யக் கூடாது'' என்று கூறினார்.

இதையும் படிக்க: இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜெண்ட் அகற்றச் சொன்னதால் பரபரப்பு