டிரெண்டிங்

காரை முட்டி தூக்கி வீசிய முரட்டுக்காளை - வீடியோ

காரை முட்டி தூக்கி வீசிய முரட்டுக்காளை - வீடியோ

JustinDurai

முரட்டுக்காளை ஒன்று காரை  கொம்பால் முட்டி தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிதின் சங்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் காளை மாடு ஒன்று காரை  கொம்பால் ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ பாட்னா நகருக்கு அருகேயுள்ள ஹாஜிப்பூரில் எடுக்கப்பட்டது என்றும் இந்த காளை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மேலும் பல ஆட்டோ, கார்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.