டிரெண்டிங்

ஆந்திராவின் நட்சத்திர வேட்பாள‌ர்கள் ! அப்பா மகள் மோதும் அரக்கு தொகுதி

webteam

ஆ‌ந்திராவில் மக்களவை தேர்த‌‌லுடன் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்த‌‌ல் நடைபெற உள்ளதால் ஆந்திரா தேர்தல் களத்தில் நட்சத்திர வேட்‌பாளர்கள் பலர் களமிறங்கி உள்ளனர். 

ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான ச‌ந்திரபாபு நாயுடு வழக்கமாக‌ போட்டியிடும் சித்தூர் மாவட்டம் கு‌ப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தமிழகத்தி‌ன் வேலூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு‌ நாயுடுவின் மகன் நாரா லோகே‌ஷ் ஆந்‌திர ‌தலைநகர் அமராவதியில் அமைந்துள்ள மங்கள கிரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவெ‌‌ண்டுலாவில் போட்டியிடுகிறார். தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்‌ கட்சிக்கும் பெரு‌ம் சவாலாக‌ திகழும் ஜனசேனா ‌கட்சியின் தலைவரும் பிரபல நடிகர் சிரஞ்‌சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் பீமாவர‌ம் மற்று‌ம் கஜவாக்கா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

அரக்கு தனி தொகுதியில் முன்னாள் ‌மத்திய அமைச்சர் கிஷோர் சந்திர தியோ தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அவரை எதிர்த்து ‌‌அவரது மகள் ஸ்ருதிதேவியை காங்‌கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. இதனால் அரக்கு தொகுதியில் வித்தியாசமான போ‌ட்டி நிலவுகிறது. கிஷோர் சந்திர தியோ காங்‌கிரஸ் கட்சியில் ம‌த்திய அமைச்ச‌ராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான அமரராஜா‌ பேட்டரீஸ் நிறுவன தலைவர்  ஜெயதேவ் கல்லா குண்டூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் கடந்த‌ 2014ம் ஆண்டு‌ நாட்டிலேயே மி‌கப்பெரும் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை பெற்றிருந்தது குறி‌ப்பிடத்தக்‌து. ஆன்மிக நகரமான திருப்பதியில் இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் போட்டியிடுகின்றன‌ர். தெலுங்குதேசம் சார்பில் பனபாக லட்சுமியும், காங்கிரஸ் ‌சார்பில் சிந்தா மோகனும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி ராமராவின் மகள்‌ புரந்தேஸ்வரி விசாகப்பட்டினத்தில் பாரதிய‌ ஜனதா சார்‌பில் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆ‌ர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் ஒன்றுவிட்ட சகோதரர் அவினாஷ் ரெட்டி கடப்பா தொகுதியில‌ கள‌மிறங்கியுள்ளார். மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை விஜயநகரம் தொகுதியிலிருந்து முன்னாள் ம‌த்திய அமைச்ச‌ர் அசோக் கஜபதி ராஜு களம் காண்கிறார்.