டிரெண்டிங்

முதன் முதலாக நடக்கும் 5 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்: இதயம் தொடும் வீடியோ!

முதன் முதலாக நடக்கும் 5 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்: இதயம் தொடும் வீடியோ!

sharpana

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் முதன்முறையாக நடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

குழந்தை பிறந்து ஒரு வயதிற்குள் நடை பழகவில்லை என்றால், உலகத்திலேயே  கொடூரமான வலி ஏற்படுவது அந்தக் குழந்தையின் தாய் தந்தைக்குத்தான். அதனால், குழந்தை பிறந்ததிலிருந்தே குழந்தை அழுகிறதா? தவழ்கிறதா? சிரிக்கிறதா? நடக்கிறதா? பேசுகிறதா? என்பதையெல்லாம் கவனித்துக்கொண்டே வருவார்கள் பெற்றோர்கள். குழந்தையின் முதல் பேச்சு, முதல் தவழல், முதல் நடைப்பழகல் அனைத்துமே பெற்றோர்களுக்கு பேரானந்தம்தான். ஆனால், 5 வயதுவரை நடக்காத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் முதன்முறையாக நடந்தால் அந்தப் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பேரானந்தமாக இருந்திருக்கும்? 

The feel good page என்ற ட்விட்டர் பக்கத்தில், அப்படியொரு பேரானந்தம் அடைந்த தாய்-மகன் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் குழந்தை போலவே தத்தித் தத்தி தனது முதல் அடியை எடுத்து வைத்து முன்னேறிச் சென்று அருகே இருக்கும் நாற்காலியை தொடுகிறான். இதைவிட அந்தத் தாய்க்கு வேறென்ன சந்தோஷம் இருந்திருக்க முடியும். சந்தோஷத்தில் சிறுவன் நாற்காலையை நடந்து வந்து தொட்டதும் மகிழ்ச்சியில் கூச்சலிடுகிறார். நெகிழ்ச்சியோடு நிறைவடையும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.