டிரெண்டிங்

”டெல்லி கலவர வழக்கு ஒருசார்பாக நடைபெறுகிறது” : குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

”டெல்லி கலவர வழக்கு ஒருசார்பாக நடைபெறுகிறது” : குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

sharpana

டெல்லி கலவர வழக்கின் விசாரணை முறையாக நடைபெறக்கோரி கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், திமுக தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்து உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. அதற்கு நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பல்வேறு எதிர்கட்சியினரும் போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்திய தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடிய 30 க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்த கலவரம் தொடர்பாக விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மற்றப்பட்டார். இதனால், அப்போதிலிருந்தே டெல்லி கலவர வழக்கில் காவல்துறையினர் பாஜகவிற்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றனர் என்கின்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாரம் யெச்சூரி, கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது படேல், திமுகவின் கனிமொழி எம்.பி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதன்பிறகு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா,

“டெல்லி கலவரம் தொடர்பான விசாரணை ஒரு சார்பாக நடைபெறுகிறது. சமூக போராளிகளை குறிவைத்து அவர்களை ஒழிக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். கலவரத்தை தூண்டும் வகையில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். எனவே குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.