டிரெண்டிங்

சிறந்த வீரர்கள் இதுபோன்ற மோசமான கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும் - கோலி குறித்து டுபிளசிஸ்

சிறந்த வீரர்கள் இதுபோன்ற மோசமான கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும் - கோலி குறித்து டுபிளசிஸ்

ச. முத்துகிருஷ்ணன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மற்றொரு மோசமான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்திய போதிலும், ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் “சிறந்த வீரர்கள் இது போன்ற மோசமான கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும்” என்று கோலிக்கு ஆதரவாக பேசினார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வடிவத்திலும் சதம் அடிக்காத கோலி, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த பேட்டிங் வீரரான விராட் கோலி மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தொடர்ந்து இரு போட்டிகளில் டக் அவுட் ஆன காரணத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கோஹ்லி, வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்தப்பட்டார். ஓப்பனராக களமிறங்கினார். ஆனால் அந்த முயற்சியும் விரும்பிய முடிவைக் கொடுக்கவில்லை. ஏனெனில் கோலி வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்போட்டியில் 145 ரன்களை கூட எட்ட முடியாமல் ஆர்சிபி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தோல்விக்கு பிறகு பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் “நாங்கள் இன்று பேட்டிங் வரிசையை மாற்ற முயற்சித்தோம். (கோலி) ஒரு ஷெல்லுக்குள் செல்ல முடியாது. சிறந்த வீரர்கள் இதுபோன்ற கட்டங்களை கடக்க வேண்டியிருக்கும். அவர் ஓரிடத்தில் உட்கார்ந்து விளையாட்டைப் பற்றி சிந்திக்காமல் இருக்க அவரை உடனடியாக விளையாட்டில் சேர்க்க நாங்கள் விரும்பினோம். இது நம்பிக்கையின் விளையாட்டு. டாப் ஆர்டர் என்பது நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு தந்திரம். நன்றாக பேட் செய்ய முதல் நான்கில் உள்ள ஒருவர் தேவை. நாங்கள் அதை தொடர்ந்து செய்யவில்லை ” என்று கூறினார்.