டிரெண்டிங்

"24 மணிநேரமும் முகவர்கள் தங்க அனுமதியுங்கள்" - தங்க தமிழ்செல்வன்

"24 மணிநேரமும் முகவர்கள் தங்க அனுமதியுங்கள்" - தங்க தமிழ்செல்வன்

webteam

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையத்தில் 24 மணி நேரமும் அனைத்துக் கட்சி முகவர்களும் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு‌வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில், பெண் தாசில்தார் சம்பூரணம் உள்ளிட்ட நால்வர் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ஆவணப் பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகியோரும்‌‌ பணியிடை நீக்கம் செய்‌யப்பட்டனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குருசந்திரனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் அதிகாரி சென்றது ஏன்? என கேள்வி எழுப்பினார். வாக்குப்பதிவு இயந்திரஙகள் உள்ள மையத்தில் இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சி முகவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்த தங்கதமிழ்ச்செல்வன், இரவு நேரத்தில் தான் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். 

எனவே 24 மணி நேரமும் அனைத்துக் கட்சி முகவர்களையும் மையத்தில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.