டிரெண்டிங்

திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச்செல்வன் !

webteam

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைந்து கொண்டார்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். மேலும் தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ தமிழக அரசியல் ‌களத்தைப் பெரும் பரபரப்பாக்கியது. இந்த சூழலில் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.  

இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை இன்று சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். தங்கதமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர். அமமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வன் அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்தும் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.