டிரெண்டிங்

பொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்

பொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்

webteam

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தரப்பின் பொதுக்குழுவிற்கு பிறகு, தங்களது ஸ்லீப்பர்செல்ஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்தால், பின்னர் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இருவருமே மக்களை சந்திக்க முடியாது என்று கூறினார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை‌ எடு‌க்காத கட்சியின் கொறடா, ‌தற்போது முதலமைச்சருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கொடுத்த மனுவுக்காக தங்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் குறிப்பிட்டார். 
தங்கள் தரப்பு எம்.பிக்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அத்துடன் குடியரசுத்தலைவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணியினர் நடத்திய பொதுக்குழுவிற்குப் பிறகு தங்களுக்கு ஆதரவான ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளதாக கூறிய தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணி ஆதரவு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், பெங்களூருவில் தங்கியுள்ள 19 எம்.எல்.ஏக்களும் தங்கள் ஆதரவு ஸ்லீப்பர்செல்ஸ் சென்றும், வெளியே விட்டால் அவர்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.