டிரெண்டிங்

கழுதையின் மீது சோலார் பவர்.. தெலங்கானா வில்லேஜ் விஞ்ஞானியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

கழுதையின் மீது சோலார் பவர்.. தெலங்கானா வில்லேஜ் விஞ்ஞானியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

JananiGovindhan

குக்கிராமங்களில் இருப்பவர்களின் புதிய கண்டுபிடிப்புகளும், தாங்கள் செய்யும் வேலையை எளிமையாக்கும்படியான சில செயல்பாடுகளும் எப்படியாவது பொது வெளிக்கு தெரியவந்து பலரது கவனத்தையும் பெற்றுவிடும்.

அந்தவகையில் தெலங்கானா மாநிலத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது வெளிச்சம் போதாமல் இருப்பதால் அந்த குறையை போக்குவதற்காக தன்னுடைய கழுதை மீது சோலார் பேனலை பொருத்தியிருக்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

அதன்படி தெலங்கானாவின் நாராயண்பேட்டை மாவட்டத்தை அடுத்த மக்தல் மண்டலத்தில் உள்ள ஜக்லைர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹுசைனப்பா. இவர் நல்லமலை வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் கழுதைகளை பராமரிப்பவராக பணியாற்றி வருகிறார்.

நல்லமலை வனம் அடர்ந்த காடாக இருப்பதால் அங்கு எந்த வெளிச்சமும், மின்சார வசதியும் இருக்கவில்லை. இதனால் மேய்த்தல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சூரிய வெளிச்சமும் இல்லாமல் போவதால் ஹுசைனப்பாவிற்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

கழுதை மீது பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல்களை பொறுத்த ஏற்பாடு செய்து, சோலார் பவர் மூலம் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் கொண்டு மொபைல் போனை சார்ஜ் செய்ய நினைத்தார் ஹுசைனப்பா. அதன்படி உடனடியாக அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார்.

கழுதைகள் மேய்ந்துக் கொண்டிருக்கும் போது அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று காட்டுப்பகுதிக்குள் வைத்து சமைத்து உண்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார் ஹுசைனப்பா. இவற்றை அவ்வழியே சென்ற உள்ளூர் மக்கள் சிலர் ஹுசைனப்பாவின் செயலைக் கண்டு திகைத்துப் போய் அதனை போட்டோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படம் இணையவாசிகளிடையே பரவலாக பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.