டிரெண்டிங்

தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Rasus

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் சமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.