டிரெண்டிங்

திருவள்ளூரில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு - திமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு

திருவள்ளூரில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு - திமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு

rajakannan

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக திருமழிசையில் வேளாண்துறையின் விவசாய நிலத்தை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் கண்காட்சியை பார்வையிட்ட அவர், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட நெற்பயிரை ஆய்வு செய்தார். இறுதியாக மாலை ஐந்து மணிக்கு திருவள்ளூர் அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுக்ககளை பெற்றுக்கொள்கிறார்.

ஆய்வு நடத்த சென்ற தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மாநில உரிமைகளில் தலையிடுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டுமென முழக்கங்களுடன் பூந்தமல்லி பகுதியில் போராட்டம் ந‌டத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கருப்புக்கொடியுடன் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவள்ளூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன், முன்னாள் எம்.பி.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேறனர். திமுகவின் போராட்டத்தை தொடர்ந்து பூவிருந்தவல்லி ட்ரங்க சாலையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.