டிரெண்டிங்

தமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் - சத்யபிரதா சாஹூ!

தமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் - சத்யபிரதா சாஹூ!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து இதுவரை ரூபாய் 127.66 கோடி கைபற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியது " ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி மொத்த வாக்காளர்கள். அதில் 2,95,94,923 ஆண் வாக்காளர்கள் , பெண் வாக்காளர்கள் 3,02,69,45. மேலும் 5790 மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவிர ஆதார் அட்டை நேற்று வரை 19,17,471 வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.


 
நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இடைத் தேர்தலுக்கு 269 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 127.66 கோடி ரூபாய் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 50.03 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார் சத்யபிரதா சாஹூ. அதுமட்டுமல்லாமல் உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.