டிரெண்டிங்

உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது: முதலமைச்சர் கடிதம்

உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது: முதலமைச்சர் கடிதம்

webteam

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சேலம் உருக்காலை தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலை என்றும், அது தனியார் மயமாக்கப்பட்டால் அதனை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 2016-17ஆம் நிதியாண்டில் சேலம் உருக்காலையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உதவியுடன், 2 ஆயிரத்து 5 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணி முடியவிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே சேலம் உருக்காலை மீண்டும் லாபத்தில் செயல்படும் வகையில் அதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அதனை தனியார் மயமாக்கக்கூடாது என மத்திய உருக்குத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.