டிரெண்டிங்

விஏஓ-களுக்கு கூடுதல் அதிகாரம்; புதிய பயிர் ரகங்கள்; பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!

webteam

பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ-களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் ரூ.550 கோடியில் பெருந்திட்ட வளாகங்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

2020-21ல் நிகரக் கடன் வரம்பு ரூ.62,757 கோடியாக இருந்தாலும் ரூ.59,209 கோடி மட்டுமே கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு 4.023%-லிருந்து சிறிது உயர்ந்து 4.189%ஆக உள்ளது.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.