உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர உறுதியேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மறைந்த தமிழறிஞர் நன்னன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், மாநிலங்களில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் வழக்காடுதல் நடைபெற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் தான் மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களுக்கு சிலைகள் நிறுவப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.