டிரெண்டிங்

நான் ஸ்லீப்பர் செல் இல்லை: கண்கலங்கிய செல்லூர் ராஜூ

நான் ஸ்லீப்பர் செல் இல்லை: கண்கலங்கிய செல்லூர் ராஜூ

rajakannan

தினகரன் கூறியது போல் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கண்கலங்க கூறினார்.

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 5 நாட்களில் பரோலில் வந்துள்ளார். அவரை அரசியல் ரீதியாக யாரும் சந்திக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை சிறைத்துறை நிர்வாகம் விதித்துள்ளது. இருப்பினும், முதலமைச்சர் பழனிச்சாமி தரப்பினரை சார்ந்த சிலர் பார்க்கக் கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா என கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சி அமைப்பதற்காக சசிகலா மிகச் சிறப்பான முறையில் பாடுபட்டார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தக் கருத்தை நான் மாற்றிக் கொள்பவனும் இல்லை. முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு என்னுடைய கருத்து பாதகமாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூயின் கருத்தை தொடர்ந்து, தற்போதுதான் சிலீப்பர் செல் உறுப்பினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார். அதேபோல், தினகரனும் தனது பேட்டியின் போது ஸ்லீப்பர் செல் என்பதை குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்று தெரிவித்தார். அப்போது அவர் கண்கலங்கினார். மேலும், “சசிகலா குறித்து நான் கூறியது தவறாக பெரிதாக்கப்பட்டுள்ளது. எளிமையான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர வேண்டும்” என்றார்.