நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையாற்றினார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று உள்ளே சென்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அலுவலர் ஒருவர் இடது கை விரலில் மை வைத்தார். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ''ராணுவம் வரும் அளவுக்கு கோவையில் எதுவும் நடைபெறவில்லை. கோவையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடி மறைக்க அதிமுக நாடகமாடியுள்ளது. எங்கள் கணிப்பின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு