டிரெண்டிங்

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை - தமிழிசை விளக்கம்

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை - தமிழிசை விளக்கம்

webteam

செம்மாழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். 

செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக பல தலைவர்களும் சொல்லி வந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, தாம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இதில் ஏற்கனவே உள்ள தமிழ் விருதுகள் எதுவும் நீக்கப்படவில்லை என்பதை தாம் அறிந்து கொண்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருதுக்காக புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகள் குறித்துதான், அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை கூறியுள்ளார். ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வேண்டுமென்றே தமிழ் வெறுப்புணர்வு பாரதிய ஜனதாவிடம் பரவியிருக்கிறது என விஷ கருத்துக்களை கக்கி வருவதாக தமிழிசை சாடியுள்ளார்.