டிரெண்டிங்

“வறுமைக்கு எதிராக காங்கிரஸின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்” - ராகுல் காந்தி

“வறுமைக்கு எதிராக காங்கிரஸின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்” - ராகுல் காந்தி

rajakannan

நாட்டில் நிலவும் வறுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடங்க உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வறுமையை எப்படி ஒழிப்பது என்பதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தி இதைத் தொடர்ந்து குறைந்த பட்ச வருவாய் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்த பட்ச வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன் பின் நாட்டில் ஒரு ஏழை கூட இருக்கமாட்டார் என்றும் குறிப்பிட்டார். 

பிரதமர் மோடி பணக்காரர்களுக்காக செலவழித்து வருவதாகவும் ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்காக செலவழிப்போம் என்றார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 14 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டதாகவும் எனினும் இன்னும் 25 கோடி பேர் வறுமையின் பிடியில் இருப்பதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.