டிரெண்டிங்

"ரஜினியின் படிப்பறிவின்மையை காமராஜருடன் ஒப்பிடாதீர்கள்"

"ரஜினியின் படிப்பறிவின்மையை காமராஜருடன் ஒப்பிடாதீர்கள்"

webteam

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் ரஜினிகாந்த்-ன் அரசியல் வருகை குறித்தும், அவரின் படிப்பறிவு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டுவரும் நிலையில், அவரைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.  "காமராஜரின் படிப்பறிவின்மையை ரஜினிகாந்தின் படிப்பறிவின்மையுடன் ஒப்பிட முடியாது. காமராஜர் அரசியல் தொண்டராக இருந்து முதலமைச்சராக உயர்ந்தவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்" அவர் என கூறியுள்ளார். மேலும், "ரஜினியின் சினிமா வசனங்கள்கூட வேறொருவரால் எழுதப்படுமளவுக்கு அவர் கல்வியறிவற்றவர்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினியை 420 என்று சுவாமி குறிப்பிட்டுள்ளதால், ஆபாசமான சொற்களால் அவரை ரசிகர்கள் வசைப்பாடியும் வருகின்றனர். இதற்கு பதிலடியாக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீதுள்ள வழக்குகள் குறித்த நாளிதழ் இணைப்புகளை சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுவருகிறார்.