டிரெண்டிங்

குருமூர்த்தி V/S சுப்ரமணிய சாமி: தொடரும் ‘ட்விட்டர் யுத்தம்’

குருமூர்த்தி V/S சுப்ரமணிய சாமி: தொடரும் ‘ட்விட்டர் யுத்தம்’

webteam

குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர பிரச்சாரகர் என்று அழைக்கலாம் என பாரதிய ஜனதா எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அடிகடி பேசப்பட்ட பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி! ரஜினியின் அரசியலை ஆரம்பம் முதலே வாரவேற்றும் வாழ்த்தியும் வரும் இவர், சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் புகைப்படத்தை ஒருபுறமும், பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒரு புறமும் வைத்து வாக்கு சேகரித்தால் தமிழ்நாட்டில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று பேசி இருந்தார். அதை வைத்து ரஜினி, பாஜகவின் சார்பு கொண்டவர் என்பதற்கு இதுவே சான்று என சமுகவலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர். 

ரஜினியின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து ஆதரித்து வந்த குருமூர்த்தி, ரஜினி அமெரிக்கா செல்வதற்கு முன் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதற்கு ரஜினியே  முற்றுபுள்ளி வைத்தார்.  குருமூர்த்தி என்னுடைய 25 ஆண்டுகால நண்பர். அவரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இப்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் அதை பற்றியான பேச்சு அதிகமாக இருகிறது என்பதோடு அதை முடித்து வைத்தார். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இங்கு வெற்றிடம் இருப்பதாகவும், ரஜினியும் மோடியும் இணைந்தால் தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி அளிக்கும் வகையில், அவர் ஆட்டிட்டர் வேலையை பார்க்காமல் அரசியல் பார்க்கிறார். அரசியல்வாதியாக இருந்தால் அவரால் அப்படி சொல்ல முடியாது என்றார்.  இந்த நிலையில் இது பற்றி சமூகவலைத்தளங்களில் பரபரப்பான விவாதம் போய் கொண்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி. சுப்ரமணியன் சுவாமியும் இது பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். ஊடகங்கள் குருமூர்த்தியை, ஆடிட்டர் என்றும் ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதி என்றும் அழைப்பதாகவும், ஆனால் ஆர்எஸ்எஸ்சில் அதுபோன்ற ஒரு பதவியே இல்லை என்றார். மேலும் அவர் ரஜினியின் விளம்பர பிரச்சாரகர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

இது உண்மைதான் என்கிற ரீதியில் பலர் அதில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் பதிவை சுட்டிக்காட்டி குருமூர்த்தி பேசியுள்ளார். அதில் ஊடகங்கள் முதலில் என்னை வி.பி.சிங் ஆலோசகராக நியமித்தது. பின் வாஜ்பாய் ஆலோசகர் என்றார்கள். அதன்பின் ஜெயலலிதாவின் ஆலோகர் என்றார்கள். மோடியின் ஆலோசகர் என்றார்கள். ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதி என்றார்கள். இப்போது ரஜினியின் ஆலோசகர் என்கிறார்கள். ஆனால் சமந்தபட்டவர்கள் என்னை யாரும் எந்தப் பொறுப்பிலும் நியமிக்கவில்லை. நான் ஒரு பத்திரிகையாளர். ‘துக்ளக்’ ஆசிரியர் அவ்வளவுதான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைபற்றி பலரும் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதில் பாசு மஹாஜன் ஷெட்டி என்ற ஒருவர் இரண்டு புத்திசாலிகள் சண்டையிடுவதை பார்ப்பதற்கு சந்தோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, நான் சுப்ரமணியன் சுவாமியிடம் சண்டையிடவில்லை. அவர் எனக்கு மூத்தவர். அவர் தேசிய அளவில் மிகச் சிறந்த வேலைகளை செய்து இருகிறார். நான் சுப்ரமணியன் சுவாமிக்கு  ஆதரவாகதான் இருப்பேன். மூத்தவர் என்கிற அடிப்படையில் அவர் என்னைப் பேச அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.