கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் எம்.எஸ்.தோனியை போல ஸ்டம்பிங் செய்வதாக தனது அணியின் ஷெல்டன் ஜாக்சனைப் பாராட்டினார்.
ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 35 வயதான ஷெல்டன் ஜாக்சன் தனது சிறப்பான ஆட்டத்தின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டார். முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனும் தற்போதையை கொக்லத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஷெல்டனின் ஆட்டத்தை பாராட்டியுள்ளனர். அவரது ஆட்டத்தை முன்னாள் இந்திய கேப்டன் தோனி மற்றும் ஆண்ட்ரூ ரஸல் ஆகியோர் ஆட்டத்துடன் மெக்கல்லம் ஒப்பிட்டு பேசினார்.
“ஜாக்சன் மிகவும் திறமையானவர். சிறப்பாக பந்தை தாக்கும் திறன் கொண்டவர். இது நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரே ரஸ்ஸலை நினைவுபடுத்துகிறது. ஷெல்டனுக்கு 35 வயது ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. அதிக வாய்ப்புகள் கிடைத்தால், ஷெல்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் அவரது விக்கெட் கீப்பிங் திறமை அபாரமாக உள்ளது. அவர் MS தோனி கீப்பிங் செய்வது போல் ஒருவிதமான உணர்வைப் தருகிறார். உண்மையில் வேகமான கைகள் மற்றும் சுழலைப் பற்றிய புரிதல், பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் நன்றாகச் செய்ய ஆசைப்படுகிறார்” என்று கூறினார் பிரண்டன் மெக்கல்லம்.