டிரெண்டிங்

படித்த பள்ளியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை - ஆட்சியரிடம் மனுகொடுத்த மாணவி

படித்த பள்ளியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை - ஆட்சியரிடம் மனுகொடுத்த மாணவி

Sinekadhara

பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தனித்தேர்வு எழுத வைக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் மகள் மாரிசுதா. இவர் புளியங்குடியில் உள்ள ஸ்ரீ கண்ணா என்ற தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பிலிருந்து பயின்று வந்திருக்கிறார். ஆனால் காலாண்டு அரையாண்டு தேர்வுகளை பள்ளி மூலம் எழுதியுள்ள நிலையில், இவரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மட்டும் பள்ளி மூலமாக அல்லாமல் தனித்தேர்வாக எழுத செய்திருக்கின்றனர். மேலும்10.08.19 அன்றே இந்த மாணவிக்கு டிசி கொடுத்தாக பள்ளி நிர்வாகம் கூறியிருக்கின்றனர்.

இதனால் தற்போது மாணவி குடும்பத்தினருடன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்துள்ளார். மேலும் 7ஆம் வகுப்பு முதல் அந்த பள்ளியில் பயின்ற மாணவிக்கு ஏன் 10 வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தனித்தேர்வு எழுத கூறினார்கள் எனவும், அதனால் அந்த மாணவி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.